எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே, தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும், அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும்தான் நம்பி இருக்கின்றன. -பெர்னாட்ஷா-

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? அருமையான video


Download As PDF

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்

மூலையில் கிடக்கும் வாலிபனே - தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனம்தான் வாழ்க்கையென - வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்

விரக்தி எனும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சகீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழி விழி உன் விழி நெருப்பு விழி - உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி!
எழுஎழு தோழா உன் எழுச்சி - இனி
இயற்கை மடியில் பெரும் புரட்சி

நீட்டிப் படுத்தால் உலக உருண்டையில்
நீதான் பூமத்திய ரேகை - நீ
போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வளம் வரும் புதுப்பாதை

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்துச்சொல் - உன்
சுட்டு விரலின் நகமாய் வானம்
சுருங்கியதென்று முழக்கிச்சொல்

தோள்கள் உனது தொழிற்சாலை- நீ
தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவானம்தான் உன் எல்லை

கால்நகம் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் - உன்
தோள்களிரண்டும் தெற்கு வடக்காய்
துருவங்களுக்குப் பாலமிடும்!

மன்புழுவல்ல மானிடனே - உன்
மாவலிகாட்டு வானிடமே
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே - இவை
வேலைகளல்ல வேல்விகளே - தாராபாரதி -
Download As PDF

முட்டாள்கள் தினமும் - தமிழ் புத்தாண்டும் ?

ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினமாக எப்படி வந்தது இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. பண்டைக் காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல் ஒன்று மற்றும் அதை ஒட்டிய தேதிகளை புத்தாண்டாக கொண்டாடினார்கள். அப்போது அய்ரோப்பிய நாடுகளில் நாட்களை குறிப்பிட ஜுலியன் காலண்டர் என்ற பழங்கால காலண்டரை பயன்படுத்தி வந்தனர். அதிலும் புத்தாண்டு தினம் ஏப்ரல் முதல் தேதியே இருந்தது. 1582 ஆம் ஆண்டு போப் 13 ஆம் கிரி-கோரி, ஜார்ஜியின் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்-தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1 முதல் தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இனி மக்கள் இந்த காலண்-டரை தான் பின்பற்ற வேண்டும் என்றும் போப் உத்தரவிட்டார். இதை பிரான்ஸ் நாடு உடனே ஏற்றுக்கொண்டது. பிரான்சு மன்னர் அந்த நாட்டு மக்களை புதிய காலண்டரை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று அனைவரும் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினார்கள். வேறு சில நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் புதிய காலண்டரை பின் பற்றவில்லை. சில பகுதி மக்களுக்கு காலண்டர் மாற்றப்பட்டு இருக்கும் தகவலே சென்றடைய வில்லை. எனவே அவர்கள் முன்பு போல ஏப்ரல் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருந்தனர். விவரம் தெரியாமல் இவர்கள் இன்னும் ஏப்ரல் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் என்று புதிய காலண்டர் முறையை பின் பற்றியவர்கள் கருதினார்கள். எனவே ஏப்ரல் முதல் தேதி புத்தாண்டு கொண்டாடியவர்களை அவர்கள் முட்டாள்களாக கருதினார்கள். கேலி செய்து ஏராளமாக பேசினார்கள். காலப் போக்கில் ஏப்ரல் முதல் தேதி என்றாலே முட்டாள்கள் தினம் என்று ஆனது. அதைப்போலவே தமிழக அரசால் தை ஒன்றுதான் தமிழ் வருடப்பிறப்பு என அறிவிக்கப்பட்டு நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்திய பின்பும் . சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டு என கொண்டாடுபவர்களையும் ,அதற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களையும் எந்த வரிசையில் சேர்ப்பது .
Download As PDF

படிங்க........ பார்த்து..... படிங்க.....!

நெ.து.சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார். பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி. முதல்வர் கலைஞர் வருகிறார். கலைஞரை விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லும்போது நெ.து.சு அவர்கள் கலைஞரிடம் படிக்கட்டுகளில் கவனமாக நடந்து வருக என்பதை உணர்த்தும் வகையில் படிங்க.... பார்த்து...... படிங்க என்று சொல்லிக் கொண்டே வரும்போது கலைஞர், எங்க அப்பா அம்மா சொல்லியே கேட்கலை என்று சொல்ல அனைவரும் சிரித்தனர் .

-தகவல் ஆசிரியர் வீரமணி-
Download As PDF

சொன்னபடி அதிபரான இளைஞன்

அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி.
அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும்
பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப்
பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம்
பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன்
கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி.
பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும்
இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான்.
விழிகளை உயர்த்திவிட்டு, ""குட்'' என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதுதான் லட்சியம் என்ற அந்தச் சிறுவன்
பிற்காலத்தில் அப்படியே ஆனான். அவன் வேறு யாருமல்ல... புகழ் பெற்ற
பில் கிளிண்டன்.

-தகவல் - சுகி.சிவம் -
Download As PDF